அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'நாயகி'. இந்த தொடரின் ஆரம்பத்தில் சினிமா நடிகை விஜயலெட்சுமி ஹீரோயினாக நடித்தார். பின் சில காரணங்களுக்காக அவர் தொடரை விட்டு வெளியேற வித்யா பிரதீப் ஹீரோயினானார். வித்யா ப்ரதீப்பின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுபோலவே வில்லியாக நடித்த சுஷ்மா நாயரும் பிரபலமாகி இன்று சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த வித்யா ப்ரதீப், சுஷ்மா நாயர், மீரா கிருஷ்ணன் மற்றும் மெர்சி லேயாள் சமீபத்தில் மீண்டும் சந்தித்து கொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மிரா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். நாயகி தொடரின் நாயகிகள் நால்வரும் ஒன்றாகும் நிற்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் 'நாயகி' சீரியலை ரொம்பவும் மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். இவர்களின் காம்போவில் மீண்டும் புதிய சீரியல் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.