2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
நடிகர் தனுஷ் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , ஹாலிவுட் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் . திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல வேலைகளையும் பார்த்து வருகிறார் . தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார் .
ரஜினியின் காலா , மாரி 2 போன்ற படங்களுக்கு பிறகு பட தயாரிப்பிற்கு இடைவெளி விட்டு சில வருடங்கள் பட தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார் . தற்போது மீண்டும் அடுத்தடுத்து பல படங்களை தனுஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் மற்றும் மாரி செல்வராஜுடன் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களும் வெற்றிமாறனுடன் இணைந்து ஒரு படமும் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .