பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இதையடுத்து ஹிந்தியில் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் 24 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள சமந்தா பதிவிடும் ஒவ்வொரு அப்டேட்களுக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் திடீரென்று சமந்தாவின் இன்ஸ்டாவில் மர்ம நபரின் புகைப்படம் வெளியானதால் அவரது இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம் பெற்றது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சமந்தாவின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.