75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? |

லிங்குசாமி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி, நடிகை கிர்த்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாகும் படம் 'வாரியர்'. ஜுலை 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா இன்று (ஜூலை 6) சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 28 சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
பாரதிராஜா, மணிரத்னம், பிரபு, ஷங்கர், விஷால், ஆர்யா, ஆர்கே செல்வமணி, கார்த்தி, பார்த்திபன், விக்ரமன், வெற்றிமாறன், கவுதம் மேனன், எஸ்ஜே சூர்யா, லோகேஷ் கனகராஜ், வினோத், சிவா, சசி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன், வசந்தபாலன், கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்பராஜ், பி.எஸ்.மித்ரன், விக்ரம் பிரபு, ரோபோ சங்கர், அன்புச்செழியன், பன்னீர் செல்வம், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர்தான் அந்த 28 பேர்.
ஒரு திரைப்பட விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொள்வது ஆச்சரியமான ஒன்றுதான். அந்தப் பிரபலங்கள் அனைவருமே லிங்குசாமிக்கு நெருக்கமானவர்கள். 'அஞ்சான்' படத்தின் படுதோல்விக்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த 'சண்டக்கோழி 2' படமும் சரியாகப் போகவில்லை. இந்த 'வாரியர்' படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, லிங்குசாமியைத் தூக்கிவிட அவரது சினிமா நண்பர்கள் இத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.