தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் படத்தில் மோகன்லால் மீனாவின் இளைய மகளாக நடித்து பிரபலமானவர் எஸ்தர் அனி.ல் அந்த படத்தை தொடர்ந்து அந்த படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்குகளிலும் கூட அந்த மொழி ஹீரோக்களுக்கு மகளாக இவர் தான் நடித்தார்.. அதைத்தொடர்ந்து கடந்த வருடம் வெளியான திரிஷ்யம்-2வில் நடித்திருந்த இவர் கல்லூரி செல்லும் பருவப்பெண்ணாக வளர்ச்சி அடைந்திருந்தார். இதுதவிர தொடர்ந்து சோசியல் மீடியாக்களிலும் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வந்த எஸ்தர் அனில், கதாநாயகியாக நடிப்பதற்கு தான் தயாராகி விட்டதை சூசகமாக உணர்த்தி வந்தார்.
இந்த நிலையில் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் மின்மினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் எஸ்தர் அனில். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ஊர் திரும்புவதற்கு முன்னதாக அங்கே பிரபலமான பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார் எஸ்தர்.
இது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள எஸ்தர், “ஆகாயம் மேலே.. பாதாளம் கீழே என ஒரு மறக்க முடியாத ஜிலீர் அனுபவமாக இது இருந்தது” என ஆகாயத்தில் பறந்து அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் எஸ்தர் அனில் நடித்த ஜாக் அண்ட் ஜில் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.




