புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தனுஷ் நடித்திருக்கும் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படம் ஜூலை 22 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் நிலையில், தமிழில் அவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து வாத்தி, நானே வருவேன் போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
இந்த நிலையில் மாறன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அதோடு இந்த படம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியானது. அதன்படி இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என பெயரிட்டுள்ளனர். இதை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ் தனது முகத்தை துணியால் மூடியபடி, முதுகில் துப்பாக்கி வைத்திருக்க புல்லட்டில் பறந்து வருவது போன்று அனிமேஷன் டைப்பிலான வீடியோவை வெளியிட்டுள்ளனர். பின்னணியில் விசில் தீம் ஒலிக்கிறது. இந்த அறிவிப்பு வைரலாகி வருகிறது. குறிப்பாக ரசிகர்கள் இதை அடுத்த பான் இந்தியா படம் என கருத்து பதிவிட்டு வருகுின்றனர்.
இதற்கு முன்பு தனுஷ் நடித்த தொடரி, பட்டாசு, மாறன் உட்பட பல படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.