தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

கன்னடத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛முப்தி'. இதை தமிழில் ‛பத்து தல' என்ற பெயரில் ரீ-மேக் செய்து வருகிறார்கள். கேங்க்ஸ்டர் கதையான இதில் சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‛ஜில்லுனு ஒரு காதல்' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் வளர்ந்துள்ளது.
இன்னும் படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தற்போது சிம்பு தனது தந்தை டி.ராஜேந்தருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ளார். அவர் திரும்பியதும் முழுமூச்சாக இதன் படப்பிடிப்பு தொடர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி படம் வருகிற டிச., 14ல் உலகம் முழுக்க வெளியாகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மற்றொரு படமான ‛வெந்து தணிந்தது காடு' செப்., 15ல் ரிலீஸவதாக இரு தினங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. இப்போது அடுத்த அப்டேட்டாக ‛பத்து தல' படம் பற்றிய ரிலீஸ் அறிவிப்பு வந்துள்ளது. சிம்பு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.