இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதையை மெருகேற்றும் வேலையில் படத்தின் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டுள்ளாராம்.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் கேட்டிருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். இருப்பினும் இரண்டாம் பாகத்தில் அவருக்காக ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். அதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சுகுமார் தயாரித்த தெலுங்குப் படமான 'உப்பெனா' படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் தமிழ் நடிகரும், ஹிந்தி நடிகரும் நடித்தால் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம். விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்தால் 'விக்ரம்' படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பகத் பாசிலுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பார்.