படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் கோகுல கிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கெஸ்ட் ; சாப்டர்-2'. ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷி அகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர். அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் கூறியதாவது: இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. நல்ல வியாபாரத்திற்கான அம்சங்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போது தான் முழுமையாகக் கையாளப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது.
அதிலும் இங்கே இந்தியாவில் இந்த ஓநாய் மனிதன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம். கொடைக்கானல் மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடர்ந்த காடு ஆகியவற்றில் கிட்டத்தட்ட 45 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். என்றார்.