Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒய்.ஜி.மகேந்திரன் நாடக குழுவை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய ரஜினி

28 ஜூன், 2022 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Rajini-congrats-YG-Mahendran-drama-team

திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தொடர்ந்து மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார். தற்போது சாருகேசி என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். கடந்த 26ம் தேதி இந்த நாடகம் நாரதகான சபாவில் நடந்தபோது ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் நாடகத்தை பார்க்க சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் நாடக குழுவை பாராட்ட முடியாமல் சென்று விட்டார். இதனால் நாடக நடிகர்களின் மனம் வருந்தப்பட்டிருக்கும் என்று கருதிய ரஜினி, நாடகத்தில் நடித்த அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார்.

இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரன் கூறியதாவது: உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன். அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை. மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார். சொன்னபடி எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராக்கெட்ரி படத்தில் போலீசாக வலிமை நடிகர்ராக்கெட்ரி படத்தில் போலீசாக வலிமை ... மன்னிப்பு கேட்டதா டிஸ்னி :  ரூ.2500 கோடி ஆபரை ஏற்றாரா 'ஜாக் ஸ்பேரோ' ஜானி டெப் மன்னிப்பு கேட்டதா டிஸ்னி : ரூ.2500 கோடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
01 ஜூலை, 2022 - 08:45 Report Abuse
Bhaskaran என்னது மெய்யாலுமே மகேந்திரன் நகைச்சுவை நடிகரா
Rate this:
thangam - bangalore,இந்தியா
29 ஜூன், 2022 - 14:32 Report Abuse
thangam இவர் அவங்க வீட்டுக்கு போயி பாராட்ட மாட்டாராமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in