ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த 'விக்ரம்' படம் ஜுன் 3ம் தேதி வெளிவந்தது. மூன்று வாரங்களை இந்தப் படம் நிறைவு செய்து நான்காவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளை முறியடித்து நம்பர் 1 வசூல் படமாக இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நான்காவது வாரத்திலும் நூற்றுக்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
மூன்று வார முடிவில் இந்தப் படம் 380 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில 165 கோடி, கேரளாவில் 36 கோடி, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 28 கோடி, கர்நாடகாவில் 20 கோடி, வட இந்தியாவில் 11 கோடி, வெளிநாடுகளில் 120 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் இந்தப் படத்தைச் சரியாகக் கொண்டு போய் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அங்கும் படம் சரியாகப் போய் சேர்ந்து வெற்றி பெற்றிருந்தால் 500 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
ஜுலை முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் 'விக்ரம்' வெளியாக உள்ளது. அங்கும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.