நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் | டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது |
பிரபல பின்னணி பாடகி சின்மயி கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பான 'மீ டு' என்கிற சோசியல் மீடியா பிரச்சாரத்தின் மூலமாக பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதன் மூலம் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இதனாலேயே நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் சின்மயி மீது கருத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது திடீரென சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.. இருந்தாலும் அவர் தான் ஏற்கனவே வைத்திருக்கும் பேக்கப் கணக்கு மூலமாக இந்த தகவலை தெரிவித்துள்ளதுடன் தனது கணக்கு நீக்கப்பட்டு அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
சின்மயியின் கணக்கிற்கு ஆண்கள் சிலர் தங்களது ஆணுறுப்புடன் கூடிய புகைப்படங்களை நேரடி செய்தியாக (DM) தொடர்ந்து அனுப்பி வந்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் சப்போர்ட் குழுவில் சின்மயி புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது கணக்கை இன்ஸ்டா குழு நீக்கிவிட்டதாக சின்மயி கூறியுள்ளார்.