சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்.எப்.டி.சி) தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமா பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த இருக்கிறது. இதனை என்எப்டிசி இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக்கூறுகள், திரைப்படத் துறையின் வருவாய் தரப்பு பங்குதாரர்களான தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திடம் கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு வருவாய் இழப்பை அடையாளம் கண்டு சரி செய்தல், தயாரிப்பில் உள்ள தயாரித்து முடிக்கப்பட்டுள்ள படங்களை அடையாளம் கண்டு ஆதரவளிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். என்கிறார்.