கழட்டி விட்ட தம்பியால் புலம்பும் இயக்குனர் அண்ணன் | அருளானந்தபுரம் டூ ஹாலிவுட் ஜெயித்த ஜெர்மி எர்னஸ்ட் | பல்லாண்டு வாழ்க, சந்திரமுகி, லோகா சாப்டர் 1 - ஞாயிறு திரைப்படங்கள் | ‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா |

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி சரத்குமார், தனஞ்செயன், மேகா ஆகாஷ் உள்பட பலர் நடித்த படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவா டையூ டாமன் ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது.
தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தொடர்ந்து கூறிவந்தார். தற்போது விஜயகாந்த் நடிக்காமலயே படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
இந்த படத்தில் விஜயகாந்த் இரண்டு காட்சியில் மட்டும் நடித்தால் போதும் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் நடிக்கவில்லை. தற்போது அவரது குரலை மட்டும் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார்கள்.
இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது: விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது காட்சியின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இருப்பினும் விரைவில் அவருடைய காட்சியை படமாக்குவோம் என்றும் நம்பிக்கை உள்ளது. ஒருவேளை அது சாத்தியப்படாவிட்டால் அவரது குரலை பயன்படுத்துவோம். இந்த படத்திற்கு விஜயகாந்த் எவ்வளவு முக்கியம் என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும். என்று கூறியுள்ளார் விஜய் மில்டன்.