அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கீதா கோவிந்தம் படம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா, சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரராக மாறியுள்ளார். குறிப்பாக அவர் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் பதிலளிப்பது, பொதுவெளியில் அவர்களுடன் எந்த பாகுபாடும் காட்டாமல் புகைப்படம் எடுத்துக்கொள்வது என எளிமையான ஒரு நடிகையாக காட்சியளிப்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
அப்படி சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக தனது கேரவனில் இருந்து இறங்கி வந்தார் ராஷ்மிகா. அப்போது அங்கே கூடியிருந்த புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடியே அங்கிருந்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ராஷ்மிகா. ஒருசில ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அப்படி ஒரு ரசிகர் ராஷ்மிகாவுடன் புகைப்படம் எடுக்க முன்னால் வந்தபோது ராஷ்மிகாவின் பாதுகாவலராக இருந்த ஒரு பவுன்சர் அவரை தள்ளிவிட முயற்சி செய்தார் ஆனால் கண்களாலேயே அந்த பவுன்சரை ஒதுங்கி இருக்குமாறு உத்தரவிட்ட ராஷ்மிகா முகத்தில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் புன்சிரிப்புடன் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.