பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய பிறகு சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார் சிவா. அந்த நேரம் பார்த்து ரஜினி அழைப்பு விடுத்ததால் அவரை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கத் தொடங்கினார். இதன் காரணமாக சூர்யா - சிறுத்தை சிவா இணைய இருந்த படம் தள்ளிப்போனது. இந்த நிலையில் அண்ணாத்தக்கு பிறகு மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்க போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
அதன் பிறகு வெற்றிமாறன், ஞானவேல் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதால் சிவா படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக வேறு நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க சிவா கால்சீட் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த செய்தியை சிவா வட்டாரம் மறுத்துள்ளது.
அவர்கள் கூறுகையில், தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, வெற்றி மாறன் படத்தை முடித்ததும், சிவா இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அந்த படம் ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது என்கிறார்கள். அதனால் வெற்றிமாறனின் வாடிவாசலை முடித்ததும் சிவா, ஞானவேல் ஆகியோர் இயக்கும் படங்களில் சூர்யா நடிப்பார் என்று தெரியவந்துள்ளது.