பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் என்பதால் டிசம்பரில் தான் படம் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக அவரது நடிப்பில் உருவாகி வரும் அவரின் 20வது படம் ஆகஸ்ட் 31ல் வெளியாக உள்ளது.
முதன்முறையாக சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்கிறார். உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஸ்கா நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்திற்கு இதுநாள் வரை பெயர் வைக்கப்படாமல் இருந்தது. தற்போது படத்திற்கு ‛பிரின்ஸ்' என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் உலக நாடுகளின் வரை படம் பின்னணியில் இருக்க உலக உருண்டையை கையில் வைத்தபடி சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது சிவகார்த்திகேயன் ஊர் ஊராக சுற்றும் நபராக அல்லது சுற்றுலா வழிகாட்டியாக நடித்திருக்கலாம் என தெரிகிறது.