ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
இசைஞானி இளையராஜா 80 வயதை தொட்டுள்ளதை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளையராஜா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. இசைஞானி இளையராஜாவுக்கு 80 வயது துவங்கியதை முன்னிட்டு ஆயுள் விருத்தி வேண்டி 85 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. மகன் கார்த்திக்ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் பிரபல நடிகர் பிரேம்ஜி, உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இசைஞானி இளையராஜா கஜபூஜை, கோபூஜை செய்து யாகத்தில் பங்கேற்றார்.