நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மதுரை ரசிகர்கள் திடீர் திடீரென ஒட்டும் போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பும். ஆனால் கமல் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் அவர்களை தற்போது காவல் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து நாடு முழுவதும் கமலின் சினிமாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
படத்தின் டிரைலரில் கமல் ஒரு ஆபாச வசனத்தை மறைமுகமாக பேசி இருப்பார். கமல் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி பேசலாமா என்கிற ஒரு விமர்சனம் நிலவி வரும் நேரத்தில் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் மதுரையில் அந்த ஆபாச வசனத்துடன் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மதுரை மண்டல மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகளான கதிரேசன் மற்றும் வினோத் சேது ஆகியோரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.