தமிழில் வெளியாகும் 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | அதிக சம்பளம் என்றால் வில்லனாக நடிப்பாரா கமல்ஹாசன்? | ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! |
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து ரஜினி நடித்த தர்பார் என்ற படத்தை இயக்கியவர் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். ஆனால் அவர் சொன்ன கதை விஜய்க்கு திருப்தி இல்லாததால் அந்த படம் தொடரவில்லை. அதையடுத்து சில முன்னணி ஹீரோக்களை வைத்து முருகதாஸ் படம் இயக்குவதாக தகவல் மட்டுமே வெளியாகி வந்தன. ஆனால் அந்த படங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பின் தயாரிப்பில் இறங்கி உள்ளார். தற்போது 1947 ஆகஸ்ட் 16 என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். வரலாற்று பின்னணி கொண்ட கதையில் உருவாகி வரும் இந்தப்படத்தில் கவுதம் கார்த்திக், வித் கோமாளி புகழ் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக நாயகி ரேவதி நாயகியாக நடிக்க, முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்த என்.எஸ்.பொன்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின் போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
முருகதாஸ் கூறுகையில், “ '1947- ஆகஸ்ட் 16” இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை. மனதை அசைத்து பார்க்கும் அற்புதமான படைப்பு. இந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் என்றென்றும் அது உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்” என்கிறார்.
இயக்குனர் பொன்குமார் கூறுகையில், “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, 'சுதந்திரம் என்றால் என்ன' என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.