ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் கார்த்தி.2007ம் ஆண்டில் வெளியான 'பருத்திவீரன்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வாரிசு நடிகராக சினிமாவுக்குள் வந்தாலும் தனது முதல் படத்திலேயே தன் நடிப்பின் மூலம் ரசிகர்களையும், திரையுலகினரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
அதன் பின் 'ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான்' என நடித்த படங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
அவரது நடிப்பில் 2010, 2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ஒரே ஆண்டில் மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. 2019க்குப் பிறகு இந்த வருடம் அவர் நடித்து மூன்று படங்கள் வெளிவர உள்ளன.
முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள 'விருமன்' படம் ஆகஸ்ட் 31ம் தேதியன்றும், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்கும் 'சர்தார்' படம் தீபாவளி தினமான அக்டோர் 21ம் தேதியன்றும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் கடைசியில் ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் மூன்று படங்களிலும் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் கார்த்தி. அடுத்தடுத்த இடைவெளியில் கார்த்தியின் இந்த மூன்று படங்கள் வெளிவருவது அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
இன்று தன்னுடைய 46வது பிறந்தநாளைக் கொண்டாடும் கார்த்திக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.