சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை, இசையமைப்பாளர் இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, 'ஏதாவது வேலை இருக்குதா' என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ''என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்' என இளையராஜா கூறியுள்ளார். ''அப்படியா.. நானும் அங்கே வருகிறேன்'' என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார்.
ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்.