''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்று 1200 கோடி வசூலைக் கடந்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 120 கோடி வசூலைக் கடந்து தற்போது 6வது வாரத்தில் நுழைந்துள்ளது. சென்னையில் மட்டும் தற்போது 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து மொழிகளிலும் 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு வெளிவந்த சில முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்துள்ளன. அதன் பின் வந்த சில முக்கிய படங்கள் ஓரிரு வாரங்களில் தியேட்டரை விட்டே போய்விட்டது. ஆனாலும், தமிழகத்தில் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, வட இந்திய மாநிலங்கள் என அனைத்து இடங்களிலுமே 6வது வாரத்தில் ஓடுவதை திரையுலகினர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
இப்படி ஒரு வரவேற்பும், வசூலும் மீண்டும் எந்த ஒரு படத்திற்காவது கிடைக்குமா என்பது சந்தேகம் என்றே சொல்கிறார்கள். ராஜமவுலி, பிரபாஸ் என தெலுங்குத் திரையுலகின் பிரபலங்கள் இணைந்த 'பாகுபலி 2' படம் வசூலைக் குவித்து சாதனை படைத்தது பெரிய விஷயமல்ல. ஆனால், ஒரு கன்னட சினிமா, அதிக பிரபலமில்லாத இயக்குனர், முன்னணியில் இல்லாத ஒரு ஹீரோ நடித்த ஒரு படம் இந்த அளவிற்கு வசூல் சாதனை செய்ததுதான் மிகப் பெரிய விஷயம் என இந்தியத் திரையுலகமே வியக்கிறது.