'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

சினிமா வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் துணையாய் இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களுக்கு போட்டியாக, கேரள அரசும் பிரத்யேக ஓடிடி தளத்தை தொடங்குகிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், இந்த பிரத்யேக ஓடிடி தளம் இயங்க உள்ளது என கேரள மாநில கலாச்சாரம் மற்றும் சினிமாத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார். நாட்டிலேயே ஒரு மாநில அரசு நிறுவும் முதல் ஓடிடி தளம் இதுதான்.
இது பற்றி அமைச்சர் சாஜி செரியன் கூறுகையில், “இந்த ஓடிடி தளத்திற்கு சி ஸ்பேஸ் என பெயரிட்டுள்ளோம் . இது மாநில அரசின் கலை, கலாச்சாரம், சினிமாத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக்கழகம் இதை நிர்வகிக்கும். இதில் திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியான பின்பே வெளியிடப்படும். சினிமா திரையரங்குகளைக் காக்கும் பொறுப்பும் நமக்கு இருப்பதை உணர்ந்து இந்த தளத்தை உருவாக்கியுள்ளோம். இதனால் திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் கடுகளவுகூட பிரச்சினையை சந்திக்கமாட்டார்கள். இதில் குறும்படங்கள், ஆவணப்படங்களும் திரையிடப்படும். இதனால் குறும்படம், ஆவணப்படும் எடுக்கும் இயக்குநர்களுக்கும் திரையிட ஒரு மேடை கிடைக்கும்.' என கூறியுள்ளார் .