நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சஹானா. மாடல் அழகியான இவர் அவ்வப்போது படங்களிலும் நடித்தார். சஹானாவுக்கும், சஜ்ஜாத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சஹானா தனது 21வது பிறந்தநாளன்று, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சஹானாவின் மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சஹானாவின் மரணத்திற்கு கணவர் சஜ்ஜாத்தான் காரணம் என்று அவரது தயார் புகார் அளித்ததால் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சஹானா தமிழில் நடித்த லாக் டவுன் என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை சண்டை இயக்குனர் ஜாலி பாஸ்டியன் இயக்கி உள்ளார். இதில் புதுமுகங்களுடன் சஹானா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கொரோனா ஊரங்கு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது.