டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் முதன்மை கதாபாத்தில் நடித்துள்ளார். இவருடன் முக்கிய வேடங்களில் யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற மே 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். 'கிம் கிம்' என தொடங்கும் இந்த பாடலை இயக்குனர் முருகதாஸ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ராம் சுரேந்தர் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலின் மூலம் முதல்முறையாக தமிழில் மஞ்சு வாரியர் பாடியுள்ளார்.