சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
ஐதராபாத் : பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் (57) தெலுங்கானாவில் இருந்து ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லன், ஹீரோ, இயக்கம், தயாரிப்பு என பன்முகம் காட்டி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக மத்திய அரசை அதிகம் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழு ராஜ்யசபா எம்.பி., பதவிகளும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்யும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வசமே உள்ளன.
ராஜ்ய சபாவில் எம்.பி.,க்களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காலியாகும் இந்த இரண்டு எம்.பி., பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடக்கிறது. இந்தச்சூழலில் நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, பிரகாஷ் ராஜுக்கு ராஜ்யசபா 'சீட்' வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.