‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் சிங்கிளான 'பத்தல பத்தல' நேற்று யு டியூபில் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் இப்பாடல் 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
கமல்ஹாசன் நடித்துள்ள பாடல் ஒன்று இவ்வளவு விரைவாக 1 கோடி பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் குத்துப் பாடல் ஒன்றிற்கு லோக்கலாக நடனமாடியுள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
'ராஜா கைய வச்சா, அண்ணாத்த ஆடுறார், காசு மேல காசு வந்து, ஆழ்வார் பேட்டை ஆண்டவா,' ஆகிய பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடித்துவிட்டது. கமல்ஹாசனின் குரலில் சில முந்தைய பாடல்களை இந்தப் பாடல் ஞாபகப்படுத்தினாலும் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பாடலைப் பார்த்த காரணத்தால் 24 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகளைப் பெற்றுவிட்டது.