இரண்டு பாகங்களாக வெளியாகும் தேவாரா | வெனிஸ் நகரத்தில் ஐஸ்கிரீம் வாங்க வரிசையில் நின்ற சமந்தா | 16 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அஜ்மல் - விமலா ராமன் | நிஷா - கணேஷ் தம்பதிக்கு ஆண் குழந்தை | கார் விபத்தில் சிக்கிய சின்மயி : கோபமாக வெளியிட்ட பதிவு | எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி | திலீப்பின் தங்கமணி படத்தில் இணைந்த நான்கு ஆக்ஷன் இயக்குனர்கள் | 75 நாட்களில் 150 மில்லியனை நெருங்கிய துல்கர் சல்மானின் வீடியோ ஆல்பம் | ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் | அக்., 27ல் ரிலீஸாகும் கங்கனாவின் ‛தேஜஸ்' |
'ஆர்ஆர்ஆர்' என்ற ஆயிரம் கோடி படத்தில் நடித்து விட்டு அடுத்த சில வாரங்களிலேயே 'ஆச்சார்யா' என்ற படுதோல்விப் படத்தில் நடிப்போம் என ராம்சரண் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அப்பாவுடனும் சேர்ந்து நடித்திருந்தார். இதனால், இப்படம் பெரிய அளவில் ஓடும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் படத்தைப் பார்க்க யாருமே ஆர்வம் காட்டாமல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தார்கள். வெளிவந்த அனைத்து விமர்சனங்களுமே மிகவும் நெகட்டிவ்வாகத்தான் வந்தன. இந்நிலையில் ஒரு வினியோகஸ்தர் சிரஞ்சீவிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று வெளிப்படையாகவே ஒரு கடிதம் எழுதினார்.
படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தின் தயாரிப்பாளராக ராம்சரண் நஷ்டஈட்டைத் தரத் தயாராகி வருகிறாராம். 'ஆச்சார்யா' தோல்வியடைந்தாலும் சிரஞ்சீவி நடித்து அடுத்து 'காட்பாதர், போலா சங்கர்' உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன.