சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், ஜெயசுதா, சங்கீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். முதன்முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கும் தமன் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்துவிட விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யின் 66 ஆவது படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையில் உருவாகி வருகிறது. விஜய் ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பாடல்களை உருவாக்கி வருகிறேன் . எப்படி இதற்கு முன்பு அவர் நடித்த மாஸ்டர், பீஸ்ட் படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததோ அதற்கு இணையாக இந்த படத்தின் பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கி காட்டுவேன். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.