சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
ஏ4 மீடியா ஒர்க்ஸ் சார்பில் டாக்டர். வீரபாண்டியன் மற்றும் டாக்டர் டெய்சி வீரபாண்டியன் தயாரித்துள்ள படம் துணிகரம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தை பாலசுதன் இயக்கி உள்ளார். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஓளிப்பதிவு செய்துள்ளார். ஷான் கோகுல் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பாலசுதன் கூறியதாவது : ஒரு தம்பதி மிக மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அவர்களின் வாகனத்துக்குள் திடீரென்று ஒரு குழந்தைக் கடத்தல் கும்பல் ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப்படுவதை பார்க்கிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள் தாங்கள் புறப்பட்ட படி மருத்துவமனைக்குச் சென்றார்களா? கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு ஏதாவது உதவி செய்தார்களா? என்பதே படத்தின் கதை.
படத்தின் இரண்டாவது பாதியின் கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி ?அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும். என்கிறார் இயக்குநர் பாலசுதன்.