சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து அவர் நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் கடந்த வாரம் வெளியானது. பெரிய பரபரப்பு இல்லை என்றாலும் மோசமாக இல்லாத அளவிற்கு படம் வசூலித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவருமே நடித்திருந்தனர். தனது காதலி நயன்தாராவிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சமந்தாவுக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்திருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
தற்போது தெலுங்குப் படம் ஒன்றிற்காக காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் சமந்தா, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை சென்னையில் ரசிகர்களுடன் பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இருப்பினும் படம் பற்றி அடிக்கடி தன்னுடைய நன்றியைப் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், “இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஜாலியாக நடிக்க வைத்ததற்கு நன்றி விக்கி. காமெடி தான் எனக்குப் பிடித்தமானது. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் உண்மையாக நான் எப்படி இருப்பேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அந்தக் கதாபாத்திரம் கூடுதல் சிறப்பாக இருக்கும். நீங்கள் சொன்னதை விடவே சிறப்பாக செய்து விட்டீர்கள், அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.