'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
புகழ்பெற்ற ஹாலிவுட் பாடகி நவோமி ஜட். அமெரிக்க நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர். 5 முறை சிறந்த பாடகிக்கான கிராமி விருது பெற்றவர். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். 76 வயதான நவோமி மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் அவரை பாதுகாத்து வந்தனர். தற்போது அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து நவோமியின் மகளும், பிரபல ஹாலிவுட் பாடகியுமான ஆஷ்லே ஜட் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்கள் அழகான தாயை இழந்து விட்டோம். அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவரை நாங்கள் முடிந்தவரை நன்றாக பார்த்துக் கொண்டோம். இப்போது அவரது மறைவால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி உள்ளோம். அவர் எங்களை நேசித்தது போன்றே தனது ரசிகர்களையும் நேசித்தார். என்று கூறியிருக்கிறார்.