கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் |
நடிகை ஓவியா தற்போது படங்களில் நடிப்பதை விட தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். எப்போதும் தனது கருத்தை வெளிப்படையாக கூறும் பழக்கமுடைய ஓவியா, சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவிலும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். விழாவில் அவர் பேசுகையில், ‛கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம். ஓபனாக அனைத்தையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள்' என்றார்.