'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கியவர் மோகன்ஜி. அடுத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குனர் செல்வராகவன், நடிகர் நட்டி நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஹிந்தி தான் தேசிய மொழி என்ற சர்ச்சை சினிமா வட்டாரங்களிலும், விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் மோகன்ஜி கூறுகையில், ‛‛ஹிந்தியை ஏற்க மாட்டோம். ஆனால் ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம். ஹிந்தி படிக்க புடிக்காது. ஆனால் ஹிந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம். ஹிந்தி பேச பிடிக்காது. ஆனால் தமிழ் படங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்து லாபம் அடைவோம். தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் . இப்படிப் பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை. அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும். ஆதரவு தரலாம் என்று ஒரு அதிரடி கருத்து வெளியிட்டிருக்கிறார் மோகன்ஜி.