10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

கடந்த 2017ம் ஆண்டு சிபிராஜ், நிகிலா நடிப்பில் ரங்கா என்ற படம் தயாரானது. இந்தப்படத்தை வினோத் என்பவர் இயக்க, ராம் ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. சில பிரச்னைகளால் படம் திரைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ரங்கா படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு சிபிராஜ் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சிபிராஜ் நடித்துள்ள இன்னொரு படமான மாயோன் ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.