சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'சூப்பர் குயின்' என்கிற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகைகள் தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றனர். வாரம் ஒரு டாஸ்க் என வித்தியாசமான களத்துடன் இந்நிகழ்ச்சி வாராவாரம் அசத்தலான எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் இதில் போட்டியிட்டு வரும் சீரியல் நடிகைகளான வீஜே பார்வதி மற்றும் ஜனனி அசோக் குமார் இருவரும் சேர்ந்து கரகத்தை தலையில் வைத்து 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு அழகாக நடனமாடியுள்ளனர். இதன் குறு வீடியோவை இருவரும் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. இருவரது முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.




