ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை |
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் காஜல் அகர்வால் கடந்த 2020ல் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடித்தும் வந்தார். பின்னர் கர்ப்பமானதால் தான் நடித்து வந்த படங்களில் இருந்து அவரே விலகினார். கர்ப்பகாலம் அனுபவம் பற்றி தொடர்ந்து சமூகவலைதளத்தில் தனது மகிழ்ச்சியை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்கள், திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இப்போது குழந்தைக்கு கையோடு பெயரும் என்னவென்று அறிவித்துள்ளனர். குழந்தைக்கு நீல் கிச்சுலு என பெயரிட்டுள்ளனர். நீல் என்றால் வெற்றியாளன் என்று அர்த்தமாம்.