'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் இன்றைய தினம் உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் காட்சியை சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன், இசை அமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் ரசிகர்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். அதோடு படத்தின் இடைவேளையின்போது பால்கனியில் இருந்து கீழே அமர்ந்து இருந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்து உள்ளார் பூஜா ஹெக்டே. அதை பார்த்த விஜய் ரசிகர்கள் பதிலுக்கு கையசைத்து மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளார்கள். இதையடுத்து படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வெளியே வந்த நெல்சன், அனிருத் , பூஜா ஹெக்டேவை விஜய் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதோடு செல்பிகளை எடுத்து மகிழ்ந்தனர்.