இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
மலையாள திரையுலகில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகராக இருப்பவர் அஜய் குமார் என்கிற கின்னஸ் பக்ரூ. தமிழில் டிஷ்யூம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து காமெடியில் கலக்கிய இவர், காவலன், அற்புத தீவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அற்புத தீவு படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் உயரம் குறைந்த நடிகர் என கின்னஸ் சாதனை படைத்து அப்போதிருந்து கின்னஸ் பக்ரூ என அழைக்கப்பட்டு வரும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் குட்டியும் கோலும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். .
தற்போதும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நேற்றைய தினம் கார் விபத்து ஒன்றில் சிக்கி மயிரிழையில் தப்பினார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொச்சிக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தபோது ஏதிரே வந்த ஒரு லாரி வேறு ஒரு வாகனத்தை முந்தி வந்தபோது பக்ரூ வந்த காரின் பின் கதவு பகுதியில் இடித்து தள்ளியது. இதனால் கார் நிலைதடுமாறி சாலையோரமாக மோதி நின்றது. இருந்தாலும் பக்ரூ உட்பட காரில் பயணித்தவர்கள் காயம் எதுவும் இன்றி தப்பினர். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் ஏற்பாடு செய்த வேறு காரில் அவர் கொச்சிக்கு புறப்பட்டு சென்றார்..