நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
அமராவதி : ஆந்திராவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜா, 'இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்' என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: திரைப்படத்துறையில் இருந்து நான் அரசியலுக்கு வர ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் போன்றவர்கள் உத்வேகமாக இருந்தனர். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது சந்திரபாபு நாயுடு வெற்றிக்காக 'நக்சல்'கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பிரசாரம் மேற்கொண்டேன்.
அதை கருத்தில் கொள்ளாத அவர், அரசியலில் இருந்து என்னை வெளியேற்றுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார். பின், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய வாய்ப்பால் நகரி தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றேன். சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை சந்திரபாபு நாயுடு வழங்கவில்லை. இப்போது அமைச்சராகும் வாய்ப்பை ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி உள்ளார்.
எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், வருமானத்திற்காக திரைப்படங்களில் நடித்ததுடன், 'டிவி' நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். இதையும் சிலர் விமர்சித்தனர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி எதுவும் கேட்டதில்லை.தற்போது அமைச்சராகி உள்ளதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன. எனவே, இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க மாட்டேன்.இவ்வாறு அவர்கூறினார்.