அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி |

இயக்குனர் மோகன் ஜி. இயக்கத்தில் வெளியான 'திரௌபதி' ,'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக கொண்டு புதிய படம் இயக்குவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் மோகன் ஜி. இதனால் இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் 'கர்ணன்' படத்தில் வில்லனாக நடித்த நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.




