'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்தார். தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குனர் நெல்சன், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைத்தது ஏன்? என்பது குறித்து ஒரு காரணத்தை கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில் ‛‛பீஸ்ட் படத்திற்கான நாயகி தேடலில் ஈடுபட்டு வந்தபோது இதற்கு முன்பு விஜய்யுடன் எந்த படத்திலும் நடிக்காத நடிகையாக இருக்க வேண்டும் என்று பரிசீலனை செய்தோம். அப்படி பல நடிகைகள் எங்களது பட்டியலில் இடம் பெற்று வந்தபோது தெலுங்கில் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான அல வைகுந்தபுரம்லு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தில் பூஜா மிக சிறப்பாக நடித்திருந்தார். அதன் காரணமாகவே பீஸ்ட் படத்தில் நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்தோம் என்றார். பீஸ்ட் படத்தில் பூஜாவின் நடிப்பும் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.