‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா |
பான்-இந்தியா படங்கள் என்ற மிகப் பெரிய வட்டத்திற்குள் தெலுங்கு ஹீரோக்கள் சிலரும், கன்னடத்திலிருந்து ஒருவரும் சென்று விட்டார்கள். தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், கன்னடத்திலிருந்து யஷ் ஆகியோர் இந்திய அளவில் பிரபலமாகியுள்ள தென்னிந்திய ஹீரோக்களாக முன்னிலை வகிக்கிறார்கள்.
ஆனால், தமிழில் தங்களது படங்களை பான்-இந்தியா படங்களாக வெளியிட ஆசைப்படும் ஹீரோக்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள். அஜித் அவர் நடிக்கும் தமிழ்ப் படங்களின் பிரமோஷன்களுக்கே வர மாட்டார். அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். விஜய் தமிழில் மட்டும் அவரது பட விழாக்களில், அதுவும் இசை வெளியீட்டில் மட்டுமே கலந்து கொள்வார்.
விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக இசை வெளியீட்டு விழாவையும் நடத்தவில்லை. ஆனால், ஒரே ஒரு டிவி பேட்டி மட்டுமே தந்துள்ளார் விஜய்.
'பீஸ்ட்' படத்துடன் போட்டி போட்டு முன்பதிவில் முந்திக் கொண்டிருக்கும் படமாக கன்னடப் படமான 'கேஜிஎப் 2' இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள யஷ் பிரமோஷனுக்காக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார். டில்லி, மும்பை, சென்னை, கொச்சி என சென்றுவிட்டார். அடுத்து இன்னும் சில ஊர்களுக்கு செல்லவிருக்கிறார்.
யஷ் இப்படி சுற்றிக் கொண்டிருக்க 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ள விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லையே ஏன் மற்ற மொழிகளில் உள்ள ஊடகத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள். பான்-இந்தியா படமாக வெளியிட்டால் மட்டும் போதாது அதற்கேற்றபடி இந்தியா முழுவதும் சுற்றி தங்களது படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.