ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது இந்தியில் ருத்ரா என்கிற படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகைப் பற்றி விமர்சித்து பேசியதாக ஒரு தகவல் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. குறிப்பாக தென்னிந்திய திரையுலகில் நடிகைகளை வெறும் கிளாமராக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை உடனடியாக மறுத்துள்ளார் ராஷி கண்ணா. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் தென்னிந்திய சினிமா பற்றி விமர்சித்துப் பேசியதாக கடந்த சில நாட்களாக, ஒரு செய்தி சித்தரிக்கப்பட்டும் இட்டுக்கட்டியும் உருவாக்கப்பட்டு வலம் வருகிறது. நான் ஒருபோதும் அப்படி பேசியது இல்லை. நான் எந்தெந்த மொழிகளில் நடித்து வருகிறேனோ அவற்றுக்கு உரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவு செய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.




