எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 'பாய்ஸ்' படத்தில் நடிகராக அறிமுகமானாலும் அதற்குப் பிறகு நடிக்காமல் இசையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று தெலுங்குத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் என பெயர் எடுத்துள்ளார் தமன்.
தமிழில் நிறையவே படங்கள் பண்ணியிருந்தாலும் தெலுங்கில் புகழ் பெற்ற அளவிற்கு தமிழில் புகழ் பெறாமல் இருந்தார் தமன். விக்ரம், சிம்பு, விஷால், ஆர்யா, கார்த்தி ஆகியோர் நடித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். டாப் நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தார். அதில் ஒரு ஆசை தற்போது நிறைவேறிவிட்டது.
விஜய்யின் 66வது படத்திற்கு தமன் தான் இசையமைப்பாளர் என சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அது குறித்து, “எனது நீ………ண்ட காத்திருப்பு. நமது அன்புக்குரிய விஜய் அண்ணா படம் கடைசியாக நிஜமானது. தில் ராஜு, வம்சி ஆகியோருடன் தளபதி 66 படத்தில் இணைந்தது சிறந்த பீலிங். என்னைப் பொறுத்தவரையில் 6-6-6-6-6-6. எங்கு பார்த்தாலும் இசை வெடிச்சத்தம் கேட்கும்,” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் 66வது படம் 6 பாடல் 6 சிக்ஸ் என தமன் சொல்லியிருப்பதைப் பார்த்தால் படத்தில் அதிரடியான 6 பாடல்கள் இருக்கும் எனத் தெரிகிறது.