தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா | சூர்யா 42 : அதிரடி சண்டைக் காட்சி படமாக்கம் | 22வது திருமணநாளில் ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட வீடியோ |
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இன்னொரு போட்டியாளரான கவினுடன் லாஸ்லியாவுக்கு காதல் ஏற்பட்டது. அதன்காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்கள் காதலர்களாக சுற்றி வருவதாக அவ்வப்போது செய்திகள் வைரலாகின.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த லாஸ்லியா, தற்போது கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்துள்ளார். தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது லாஸ்லியா அளித்துள்ள ஒரு பேட்டியில் , பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது கவினுக்கும் எனக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி வெளி உலகத்துக்கு வந்து நாங்கள் பழகியபோது எங்களுக்கிடையே செட்டாகவில்லை. அதனால் இப்போது இருவருமே அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம். அந்தவகையில் எங்கள் இடையிலான காதல் பிரேக் அப் ஆகி நாங்கள் பிரிந்து விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் லாஸ்லியா.