‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்' . இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாதவன் அறிமுகம் ஆகிறார். இப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார் . முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், ரஜத்கபூர், ரவிராகவேந்திரா, மிசா கோசல், கார்த்திக் குமார் ஆகியோர் நடிகின்றனர் . இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.