மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்தது. மூன்றே நாட்களில் 500 கோடி வசூலை உலக அளவில் கடந்து சாதனை படைத்தது. இப்போது அடுத்த சாதனையாக 'பாகுபலி' முதல் பாகத்தின் வசூலைக் கடந்துள்ளது 'ஆர்ஆர்ஆர்'. 'பாகுபலி' படத்தின் மொத்த வசூல் 650 கோடி. அந்த வசூலை 'ஆர்ஆர்ஆர்' ஒரே வாரத்தில் முறியடித்து 670 கோடி வசூலித்துள்ளது.
மேலும் இந்திய அளவில் 500 கோடி வசூலையும் கடக்க உள்ளதாம். ஹிந்தியில் மட்டும் 130 கோடி, தெலுங்கில் 250 கோடி, மற்ற மொழிகளில் 120 கோடி என இன்று 500 கோடியைக் கடந்துவிடும் என்கிறார்கள்.
இப்படத்தின் வசூல் மூலம் அடுத்தடுத்து மூன்று 500 கோடி கிளப் படங்களைக் கொடுத்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் ராஜமவுலி. 'பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய மூன்று படங்களுமே அடுத்தடுத்து 500 கோடியைக் கடந்துள்ளன.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் மொத்த வசூல் 1000 கோடியைக் கடக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 'பாகுபலி 2' மொத்த வசூலான 1800 கோடியைக் கடப்பது சாத்தியமில்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.