சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் ‛கே.ஜி.எப்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு, ஒரேநேரத்தில் வெளியிடப்பட்ட இந்தபடம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. இவர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். கொரோனாவால் மூன்றாண்டுகளாக உருவாகி வந்த இப்படம் பல முறை வெளியீடு தள்ளிப்போய் இப்போது ஏப்., 14ல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இதில் யஷ், சஞ்சய் தத், ரவீனா உள்ளிட்ட படக்குழுவினர் உடன் பிருத்விராஜ், கரண் ஜோகர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர். டிரைலரை கன்னட நடிகர் சிவராஜ் குமார் வெளியிட்டார்.
கேஜிஎப் படத்தின் முதல்பாகம் வில்லன் கருடன் இறந்ததும், அந்த இடத்திற்கு யஷ் செல்வது போன்று முடிந்தது. இரண்டாம் பாகம் கருடன் இறந்த பிறகு என்ன நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக ஆரம்பமாகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் என்ன நடந்தது என்பதை விவரிப்பது போன்று டிரைலர் செல்கிறது.
‛‛ரத்தத்தில் தொடங்கிய கதை இது, மையால் எழுத முடியாது, தொடரனுமுன்னா மீண்டும் ரத்தத்தை தான் கேட்கும்'' என பிரகாஷ் ராஜ் முன்னுரை கொடுக்கிறார். அதன்பிறகு கேஜிஎப்பை கைப்பற்ற அரசு ஒரு பக்கம், சஞ்சய் தத் ஒரு பக்கம் என யஷ் உடன் மோதுவதை டிரைலர் உணர்த்துகிறது. ரசிகர்களிடம் இந்த டிரைலர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான சற்றுநேரத்திலேயே பல லட்சம் பார்வைகளை டிரைலர் பெற்றுள்ளது.
முதல்பாகத்தை விட இன்னும் மிரட்டலாக அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இந்த படம் இருக்கும் என டிரைலரை பார்க்கும்போதே உணர முடிகிறது. முதல் பாகத்தை போலவே கேஜிஎப் 2வும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என தெரிகிறது.